பள்ளிக்கூட மாணவியிடம் ஆசிரியர் செய்த கொடூர செயல்... இரத்தம் சொட்ட சொட்ட வலியுடன் ஓடிய பரிதாபம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் மாற்றுத்திறனாளி மாணவியை கத்தியால் கிழித்த ஆசிரியரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் கீழையூர் பகுதியில் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி உள்ளது.

இங்கு மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் 3ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த வகுப்பின் ஆசிரியராக பாஸ்கர்(42) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் சிறுமி வகுப்பில் குறும்புத்தனமாக விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்ட பாஸ்கர் படிக்க வந்தாயா அல்லது விளையாட வந்தாயா என்று கேட்டு தன் கையில் வைத்திருந்த கத்தியால் மாணவியின் இடதுகையில் குத்தியுள்ளார்.

இதையடுத்து மாணவி கையை கத்தி கிழித்ததில் ரத்தம் சொட்டச் சொட்ட வீட்டிற்கு வலியுடன் ஓடிவிட்டார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் பொலிசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பாஸ்கர் கையில் எப்போதும் சின்ன கத்தி வைத்து இருப்பார் என தெரியவந்தது. இதை தொடர்ந்து பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்