திவாலாகிறதா இந்தியாவின் முக்கிய விமான சேவை நிறுவனம்? எரிபொருள் வழங்குவது நிறுத்தம்!

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய அரசின் முக்கிய விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியாவுக்கு வரும் வெள்ளிக்கிழமை முதல் எரிபொருள் வழங்கப்படாது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடுமையான கடன் சுமையில் சிக்கியுள்ள அரசு விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியாவிற்கு, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் எரிபொருள் வழங்கி வருகின்றன.

இந்த 3 நிறுவனங்களுக்கும் ஏர் இந்தியா நிறுவனம் மொத்தமாக 5 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்க வேண்டியுள்ளது.

இதில் இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு மட்டும் 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது.

இந்த நிலுவையை மொத்தமாக திருப்பி செலுத்த முடியாது என்பதால், மாதம் 100 கோடி ரூபாய் வீதம் 3 நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்தது.

ஆனால் இதை முறையாக பின்பற்றாததால் வெள்ளிக்கிழமை முதல், முக்கிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் வழங்குவது நிறுத்தப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

எரிபொருள் வழங்குவது தடைபட்டால், விமான சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்படும். இதனால் நிலுவையை திருப்பி செலுத்த முடியாமல் போகும் என குறித்த எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏர் இந்தியா சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்