இந்திய நீதித்துறை வரலாற்றில் இன்று பொன்னாள்: அயோத்தி தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி!

Report Print Vijay Amburore in இந்தியா

நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி தீர்ப்பு குறித்து இந்திய பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.

ஒட்டுமொத்த நாடும் பெரிதும் எதிர்பார்த்த அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பளித்தது. இதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் ஒருசேர வந்துகொண்டிருக்கும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியின் வாயிலாக மக்களிடம் உரை நிகழ்த்தியுள்ளார்.

அதில், நாடே எதிர்பார்த்த வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது. என் மனதில் இருப்பதை நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம்.

மாரத்தான் விசாரணைக்குப் பின்பு தீர்ப்பு வந்துள்ளது. நீண்ட நாளாக நீடித்த பிரச்சினையில் உச்சநீதிமன்றம் நியாயமான தீர்ப்பு அளித்துள்ளது. அயோத்தி வழக்கில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பை அனைவரும் ஏற்றுள்ளது, இந்தியாவின் சகிப்புத் தன்மையை உணர்த்துகிறது.

மிக நீண்ட சட்ட நடைமுறை முடிவுக்கு வந்துள்ளது. நீதி, நியாயம் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. உலகிலேயே இந்தியா மட்டும் தான் பெரும் ஜனநாயக நாடாக செயல்பட்டு வருகிறது. மக்களாட்சி வலிமையாக தொடருகிறது என்பதை இந்தியா காட்டியுள்ளது. அயோத்தி வழக்கு தினமும் விசாரிக்கப்பட வேண்டும் என நாடு விரும்பியது நிகழ்ந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வேற்றுமையும், எதிர்மறை எண்ணங்களும் மறைந்த தினம் இன்று. உச்சநீதிமன்றம் இந்தியாவின் வலிமையான அமைப்பு என்பது நிரூபணமாகி உள்ளது. மிக நீண்ட சட்டமுறை முடிவுக்கு வந்துள்ளது. இந்த தீர்ப்பு மூலம் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது.

கர்தார்பூரில் புதிய வழித்தடம் திறக்கப்பட்டது போல இங்கே புதிய பாதை உருவாகி உள்ளது. புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான வழி இந்த தீர்ப்பு எனப்பேசியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்