கட்டுக்கட்டாக பணக்குவியலை தீ வைத்து எரித்து கழிவறையில் கரைத்த இளைஞர்

Report Print Vijay Amburore in இந்தியா

லஞ்ச ஒழிப்புத்துறையை அதிகாரிகள் வீட்டிற்கு சோதனை செய்ய வருவதை அறிந்த இளைஞர், கட்டுக்கட்டாக பணத்தை கழிவறையில் தீ வைத்து எரித்து கரைத்துள்ளார்.

பீகார் மாநிலத்தை சேர்ந்த அரவிந்த்குமார் என்கிற பொறியியலாளர், தனியார் கட்டுமான நிறுவனத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட சாலை கட்டுமானத் துறையில் பணியமர்த்தப்பட்டார்.

அந்த நிறுவனமானது பாஜக சட்டமன்ற உறுப்பினரின் மனைவிக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.

ரூ .830 மில்லியன் மதிப்புள்ள சாலைத் திட்டத்தை அகற்றுவதற்காக, மொத்தமாக அவர் கோரிய ரூ .8 மில்லியன் லஞ்ச பணத்தில் முன்பணமாக ரூ .1.6 மில்லியன் லஞ்சம் பணத்தை அந்த நிறுவனம் வழங்கியதாக தெரிகிறது.

அதிக பணம் கேட்டதால் அந்த நிறுவனம் பணத்தை கொடுத்துவிட்டு லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இதனால் அதிகாரிகள் அவருடைய வீட்டை நெருங்குவதற்கு முன்பாகாவே, மூட்டையில் கட்டி வைத்திருந்த பணம் மற்றும் அதற்கான ஆவணங்களை வீட்டின் கழிவறையில் தீ வைத்து எரித்து நீரில் கரைத்துள்ளார்.

வீட்டில் சோதனை மேற்கொண்ட பொலிஸார், கழிவறையில் நாணயத்தாள்கள் எரிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்து அவரை கைது செய்தனர்.

இருப்பினும், எவ்வளவு பணம் எரிக்கப்பட்டது என்பது தெரியவில்லை. இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்