பிரியங்காவை கொன்ற கொடூரன்கள் ஏற்கனவே 9 பெண்கள், திருநங்கைகளை எரித்து கொன்றது அம்பலம்! பகீர் தகவல்

Report Print Raju Raju in இந்தியா

பிரியங்கா ரெட்டி வழக்கில் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நான்கு பேரில் இருவர், 9 பெண்களை பலாத்காரம் செய்து எரித்துக் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி கடந்த மாதம் பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் முகமது பாஷா, நவீன், ஷிவா, சின்னகேசவலு ஆகிய நால்வர் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த 6ஆம் திகதி என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டனர்.

இதற்கு முன்னர் சில நாட்கள் நால்வரிடமும் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்களை பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.

அதாவது, தெலுங்கானா-கர்நாடக எல்லைப்பகுதிகளில் நடைபெறும் குற்றங்களில் இந்த குற்றவாளிகளுக்கு தொடர்பு இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

15 பெண்கள் அப்பகுதிகளில் எரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில் 9 பேரை தாங்கள் எரித்துக் கொன்றதாக என்கவுண்டரில் சுடப்படும் முன்பு இரண்டு பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இவர்களில் பெரும்பாலோர் பாலியல் தொழிலாளிகள், திருநங்கைகள் மற்றும் தனியாக சிக்கிய பெண்கள் என்றும் அந்த குற்றவாளிகள் தெரிவித்துள்ளனர்.

என்கவுண்டர் தொடர்பாக மத்திய அரசின் சிறப்பு புலனாய்வு பிரிவும், உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி வி.எஸ். சிர்புர்கர் தலைமையிலான விசாரணை ஆணையமும் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...