வயிற்று வலியால் துடித்து வந்த 12 வயது மகள்... பரிசோதனையில் தெரிந்த உண்மை: பெற்றோர் அதிர்ச்சி

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் 12 வயது சிறுமி தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததால், பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது மருத்துவர்கள் சொன்ன தகவலால் அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி அங்கிருக்கும் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு சில நாட்களாக வயிற்று வலி இருந்ததால், பெற்றோர் அவரை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.

இருப்பினும் குணமாகாத காரணத்தினால், நேற்று முன் தினம் பெற்றோர் கோயமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு மகளை சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழந்தையின் வயிறு லேசாக வீங்கியிருப்பதைக் கண்டு, கர்ப்பமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், சிறுமிக்கு கர்ப்பத்திற்கான பரிசோதனை செய்யப்பட்டது.

அப்போது சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியதால், பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். சிறுமியை யாரோ ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்திருப்பது இதன் மூலம் தெரியவந்ததால், பெற்றோர் உடனடியாக அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர்.

பொலிசார் சிறுமி மற்றும் பெற்றோர் மருத்துவமனையில் இருப்பதால், விசாரணையில் சற்று தொய்வு இருப்பதாகவும், அவர்கள் வீட்டிற்கு வந்தவுடன் முழு விசாரணை நடைபெறும், சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...