நிர்பயாவின் தாயார் சேலையை பிடித்து கெஞ்சிய குற்றவாளியின் தாய்! அவரது பதில்?

Report Print Abisha in இந்தியா

நீதிமன்றத்தில், நிர்பயாவின் தாயர் சேலையை பிடித்து குற்றவாளி ஒருவரின் தாயார் கெஞ்சிய நிகழ்வு நடைபெற்றுள்ளது.

நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கடந்த 2012ஆம் ஆண்டு கொல்லப்பட்டார். அப்போதிலிருந்து வழக்கு நடைபெற்று வருகின்றது.

குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டும், அதை நிறைவேற்றாமல் இதுவரை வழக்குகள் தொடர்ந்தவாறே இருந்தன.

நிர்பயாவின் பெற்றோர் தண்டனையை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று கூறி வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது குற்றவாளி முகேஷ்சிங்-ன் தாய் நிர்பயாவின் தாயை நீதிமன்றத்திற்குள் சந்தித்து, “என் மகனின் உயிரை காப்பாற்றுங்கள். நான் உங்களிடம் அவனுக்கு உயிர் பிச்சை கேட்கிறேன்“ என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த நிர்பயாவின் தாயார் “ அவள் என் மகள்.... எப்படி என்னால் இந்த குற்றத்தை மன்னிக்க முடியும். 7 வருடங்களாக இதற்காக நான் காத்திருக்கிறேன்” என்று பதிலளித்தார்.

இதை பார்த்த நீதிபதி சற்று அமைதியாக இருந்த பின் மீண்டும், வழக்கு விசாரணையை தொடர்ந்தார்.

அரசு தரப்பு வழக்குறிஞர், குற்றவாளி தரப்பில் தற்போது வரை தண்டனை நிறுத்தவோ, அல்லது தண்டனை குறைப்பது குறித்த மனுக்கள் எதுவும் நிலுவையில் இல்லை என்று வாதிடப்பட்டது.

வாதங்கள் அனைத்தையும் கேட்ட நீதிபதி, 14 நாட்களுக்குள் குற்றவாளி தரப்பில் மனுதாக்கல் செய்யலாம் என்று குறிப்பிட்டு, ஜனவரி 22ஆம் திகதி காலை 7 மணிக்கு 4 குற்றவாளிகளையும் தூக்கில் ஏற்ற வேண்டும் என்று கூறி தீர்ப்பு வழங்கினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்