கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ள இந்தியாவில் சுழற்றி எடுக்கும் புயல்! வீடியோ

Report Print Abisha in இந்தியா

கொரோனா தாக்கம் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் புயலின் தாக்கம் வேகமெடுத்துள்ளது.

இந்தியாவில், 106,750 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பாதிப்பை கட்டுப்படுத்த தற்போது 4ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், இந்தியாவின் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் ஆம்பன் என்ற கடும்புயல் தாக்கி வருகிறது.

இந்த புயலான 20ஆண்டுகள் இல்லாத அளவு சக்திவாய்ந்த புயலாக உள்ளது.

ஒடிசாவை ஆடுத்து மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களும் ஆம்பனால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

தற்போது கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், கடும் காற்று வீசி வருகிறது.

250 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என்று கணிக்கப்பட்ட இந்த ஆம்பன் புயலினால் ஒடிசாவில் நிலச்சரிவு ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் பெரும் பாதிப்பை சந்தித்து வரும் இந்தியாவில், தற்போது ஆம்பன் புயலால் பாதிக்கப்படும் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்களை பாதுகாக்க முகாங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், அங்கு சமூக இடைவெளி கடைபிடிக்கபடுமா என்பது கேள்விகுறியாகவே உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்