சசிகலா முடிந்து போன கேஸ்... அதை பற்றி பேசாதீங்க: அதிமுக அமைச்சர் விளக்கம்

Report Print Santhan in இந்தியா

சசிகலா குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கடந்த காலத்தைப் பற்றி பேசவேண்டாம் என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளதால், அதிமுக-வின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற போட்டி, ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே நிலவி வருகிறது.

இதனால் முதல்வர், துணை முதல்வர் இடையே பனிப்போர் நிலவி வருவதாகவும் செய்தி வெளியானது.

இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஓ.எஸ். மணியன், தமிழகத்தில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 2016-ல் ஆண்ட கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடித்து அதிமுக சரித்திரம் படைத்துள்ளது.

அதுமட்டுமல்ல 234 தொகுதியிலும் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு, தேர்தலில் வெற்றி பெற்றுக் காட்டியிருக்கிறது. எனவே, கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை.

முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. துணை முதல்வரை மூத்த அமைச்சர்கள் சந்தித்து பேசுவது வழக்கமான ஒன்று தான். மழையால் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் சசிகலா வெளியே வந்தபின் அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்பாரா என்ற கேட்ட போது, அதற்கு அவர், கடந்த காலத்தை பற்றி பேச வேண்டாம். நிகழ்காலத்தை பற்றி பேசுவோம் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்