டிரம்புக்கு சிலை வைத்து கடவுளாக வழிப்பட்டு வந்த இந்திய பக்தனுக்கு நேர்ந்த சோகம்! மீளா துயரத்தில் குடும்பத்தினர்

Report Print Basu in இந்தியா

இந்தியாவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு சிலைவைத்து வணங்கி வந்தவர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஜங்கோன் மாவட்டம் கொன்னே கிராமத்தை சேர்ந்தவர் 38 வயதான புஸ்சா கிரு‌‌ஷ்ணா.

கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 6 அடி சிலையை நிறுவிய புஸ்ஸ கிருஷ்ணா, பக்தனாக டிரம்பின் சிலையை வழிப்பட்டு வந்தார்.

எனது கடவுள் இந்தியாவுக்கு வந்ததால் பெருமைப்படுகிறேன். நான் டிரம்பை கடவுளாக வணங்குகிறேன், விரைவில் அவரை சந்திப்பேன் என்று நம்புகிறேன். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார் என கடந்த ஆண்டு டிரம்ப் இந்திய வந்த போது புஸ்சா கிருஷ்ணா பேட்டியளித்திருந்தார்

இந்நிலையில், இன்று மேடக் மாவட்டத்தில் உறவினர் வீட்டில் டீ குடித்துக்கொண்டிருந்த போது புஸ்சா கிருஷ்ணா நிலை குலைந்த விழுந்துள்ளார்.

அவரை மருத்துவமனகை்கு கொண்டு சென்ற போது புஸ்சா கிருஷ்ணா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தாக குடும்பத்தினர் கூறினர்.

புஸ்சா கிரு‌‌ஷ்ணா திடீரென மாரடைப்பால் மரணமடைந்த செய்தி குடும்பத்தினரை மட்டுமின்றி அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்