வெற்றிவேலின் உடலை வீட்டின் மாடியிலிருந்து பார்த்து கதறி அழுத மனைவி! நெஞ்சை உருக்கும் புகைப்படங்கள்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் அமமுக பொருளாளர் வெற்றிவேல் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரின் உடலைப் பார்த்து வீட்டின் மாடியில் இருந்து அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுத புகைப்படம் வெளியாகி பார்ப்போரையும் கண்கலங்க வைத்துள்ளது.

அ.ம.மு.க. பொருளாளர் வெற்றிவேல் அவர்களுக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், அவர் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அவரின் உடல் நிலை மோசமானதால், தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவருக்கு திடீரென திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.

இன்று காலை வெற்றிவேலின் உடல் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அவர் வசித்த அயனாவரம் திவான் பகதூர் சண்முகம் தெருவில் உள்ள வீட்டின் அருகே கொண்டு வரப்பட்டது.

அப்போது வெற்றிவேலின் உடலை பார்த்து வீட்டின் மாடியில் இருந்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

அதன் பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டேரி மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வெற்றிவேலின் உடலுக்கு அவரது மகன் பாரத் இறுதி சடங்கு செய்தார். பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்