மகள்களை விஷம் வைத்து கொன்றுவிட்டு தாய் எடுத்த விபரீத முடிவு! அடுத்தடுத்து உயிரிழந்த சோகம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக இரண்டு மகள்களுக்கு தாய் விஷம் கொடுத்து, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி அருகே அம்மச்சியாபுரம் கிராமத்தை சேர்ந்த தம்பதி சுரேஷ் குமார்-செண்பகவள்ளி(29). இவர்களுக்கு சுரேனா(10)

மற்றும் சுரேஸ்ரீ(7) என இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் சுதர்சன் (3) என்ற மகனும் உள்ளனர்.

சுரேஷ்குமார் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை வந்துள்ளது.

இதனால் செண்பகவள்ளி மிகுந்த வேதனையில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் கணவர் மற்றும் மகன் இல்லாத காரணத்தினால், செண்பகவள்ளி தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

அதன் படி, விஷ விதைகளை (அரளி விதயை) அரைத்து அருந்தி தன் இரண்டு மகள்களுக்கும் கொடுத்துள்ளார். இதையடுத்து இவர்கள் வீட்டில் மயக்க நிலையில் கிடக்க, இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக 3 பேரையும் மீட்டு, அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் செண்பகவள்ளி மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அதன் பின் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு இரண்டு குழந்தைகளும், சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இதுகுறித்து செண்பகவள்ளியின் தந்தை முனியாண்டி, கானாவிலக்கு காவல் நிலையத்தில் தனது மகள் 2 ஆண்டுகளாக தீராத வயிற்று வலியில் இருந்ததாகவும், இதனால் தற்கொலை செய்து கொண்டதாகவும் தான் இறந்த பிறகு மகள்களை யார் பராமரிப்பார் என குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துள்ளதாக புகார் அளித்துள்ளார்.

அதன் அடிப்படையிலே பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்