ரஜினி கட்சியின் பெயர் மற்றும் சின்னம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இது தொடர்பில் விளக்கமளித்து ரஜினி மக்கள் மன்றம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஜனவரியில் கட்சி துவங்கப்படும் அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31ம் தேதி வெளியாகும் என அறிவித்த ரஜினிகாந்த், பொறுப்பாளர்களை நியமித்து அவர்கள் உதவியுடன் அதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், ரஜினிகாந்த் கட்சியின் பெயர் மக்கள் சேவைக் கட்சி, ஆட்டோ சின்னம் என தேர்தல் ஆணையம் வெளியிட்ட தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் சின்னங்கள் தொடர்பான ஆணையை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியிடப்பட்டன.
இந்நிலையில், இது தொடர்பில் விளக்கமளித்து ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி அதில் இடம் பெற்றிருந்த ஒரு கட்சியின் பெயரும், சின்னமும் ரஜினி மக்கள் மன்றத்தினுடையது என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தலைமையிலிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் வரை நம் ரஜினி மக்கள் மன்றக் காவலர்கள் காத்திருக்கும் படி கேட்டுக் கொள்கிறோம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.