திருமணம் செய்யாமல் 2 பெண்களை காதலித்து வாழ்ந்து வந்த இளைஞர்! அதன் பின் கிராம மக்களால் நடந்த சம்பவம்

Report Print Santhan in இந்தியா
632Shares

இந்தியாவில் இரண்டு பெண்களை காதலித்து திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்த நபர், அதன் பின் கிராம மக்கள் எழுப்பிய கேள்வியால், அவர்களை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

சட்டீஸ்கர் மாநிலம் பஸ்டர் பகுதியைச் சேர்ந்தவர் சந்து மவுர்யா. விவசாயியான இவர், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் 21 வயது மதிக்கத்தக்க சுந்தரி காஷ்யப் என்ற பெண்ணை காதலிக்க துவங்கியுள்ளார்.

இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், உறவினரின் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற சந்து மவுர்யா அங்கிருந்த ஹசீனா என்ற பெண் மீது காதலில் விழுந்துள்ளார்.

சுந்தரி என்ற பெண்ணை காதலித்து வருவது குறித்து ஹசீனாவிடம் சந்து மவுர்யா உடனடியாக கூறியுள்ளார்.

இருப்பினும் இரண்டு பேருமே அவருடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவிக்க, மூன்று பேரின் காதலும் மொபைல் போனில் சென்றுள்ளது.

திடீரென ஹசீனா சந்துவுடன் வாழ்வதற்காக அவரது வீட்டிற்கே வந்துள்ளார். ஹசீனா சந்துவின் வீட்டிற்கு வந்துள்ள தகவலறிந்த சுந்தரியும், சந்துவுடன் இணைந்து வாழ அவரின் வீட்டிற்கே வந்துள்ளார்.

இதனால் மூன்று பேரும், இணைந்து திருமணம் செய்யாமலே ஒரு வாழ்ந்து வந்துள்ளனர்.

திருமணம் செய்யாமல் இரண்டு பெண்களுடன் இணைந்து வாழ்ந்து வந்ததை சந்துவின் கிராம மக்கள் கேள்வி எழுப்பிய போது, இருவரையும் திருமணம் செய்ய போவதாக சந்து தெரிவித்துள்ளார்.

இரண்டு பேரும் தன் மீது விருப்பம் கொண்டுள்ளதாகவும், அவர்களை ஏமாற்றாமல் இணைந்து சந்தோஷமாக வாழ்வேன் என்றும் சந்து குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 500 க்கும் மேற்பட்டோர் முன்னிலையில் சந்து - ஹசீனா - சுந்தரிக்கு திருமணம் நடைபெற்றது. ஹசீனாவின் குடும்பத்தினர் மட்டுமே திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

சுந்தரியின் குடும்பத்தினர் யாரும் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்