உங்க கை ரேகையில் இப்படி இருக்கா? அப்போ நீங்க

Report Print Raju Raju in வாழ்க்கை முறை
614Shares
614Shares
ibctamil.com

உள்ளங்கையை உற்று கவனித்தால் அதில் பல்வேறு அடையாளங்கள் மற்றும் அமைப்புகளை காணலாம்.

இந்த அடையாளங்கள் தான் உள்ளங்கையில் ஓடிக் கொண்டிருக்கும் ரேகைகளின் மீது நேர்மறையான அல்லது எதிர்மறையான தடங்கல்கள் ஏற்படுத்தும்.

உதாரணத்திற்கு, உங்கள் உள்ளங்கையில் முக்கோண அடையாளம் இருந்தால் அது நேர்மறையான ஆற்றலை குறிக்கும்.

அதுவே உள்ளங்கையில் சிலுவைகள் இருந்தால் அது எதிர்மறையான ஆற்றலை குறிக்கும்.

சூரிய ரேகையில் முக்கோண அடையாளம்

முக்கோண அடையாளம் உங்கள் சூரிய ரேகையின் மீது, அதாவது

உள்ளங்கையின் நுனியில் இருந்து தொடங்கும் ரேகை புதன் மேட்டின் கீழ் உள்ளது.

இந்த முக்கோண உருவாக்கம் ஒருவரின் நடுத்தர வயதில் ஏற்படக்கூடிய புகழை குறிக்கும்.

ஒருவர் எந்த வயதில் புகழை அடைவார் என்பதை சூரிய முக்கோணத்தின் தோரணையை கொண்டு கணக்கிட முடியும்.

எதிர்மறை அடையாளங்கள்

உள்ளங்கையில் எதிர்மறையான அடையாளங்கள் மற்றும் சின்னங்கள் இருந்தால், அது ஒருவர் தன் வாழ்நாளில் சந்திக்கும் பேரதிர்ச்சி, வலி, உடல்நல பிரச்சனைகள் மற்றும் இதர கஷ்டங்களைக் குறிக்கும்.

சில சின்னங்கள் பிரச்சனைகளுக்கான தீர்வை, குணப்படுத்தும் காலத்தை மற்றும் உடல்நலம் தேறும் காலத்தையும் குறிக்கும்.


முறிவுகள்

உள்ளங்கையின் முக்கிய ரேகைகள் மற்றும் சிறிய ரேகைகளில் முறிவுகள் இருக்கும், இந்த முறிவுகள் எங்கே தோன்றுகிறது என்ற அடிப்படையில் தான் அவை நேர்மறையான மற்றும் எதிர்மறையான ஆற்றல்கள் குறித்து தெரியவரும்.

கட்டை விரலை நோக்கிய ரேகையில் முறிவு தென்பட்டால், ஒருவரின் தொழில் ரீதியான வாழ்க்கையில் புதிய திருப்பத்தை குறிக்கும்.

கையின் நுனியை நோக்கி இருந்தால் எதிர்பாராத பயணத்தை குறிக்கும்.சங்கிலிகள்

ஒருவர் தன் உள்ளங்கையில் சங்கிலிகள் போன்ற அடையாளங்களைக் கொண்டிருந்தால், அவர் வாழ்க்கையில் பல தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

இந்த அடையாளங்கள் ஒரு நபரின் உடல்நல பிரச்சனைகள் மற்றும் முடிவெடுக்க முடியாத குணத்தையும் குறிக்கும்.

சங்கிலி அடையாளத்தின் நீளத்தின் படி அவர்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் நீடிக்கும்.


சிலுவை

விதியை பற்றி கூறும் வல்லமை உள்ளங்கையில் காணப்படும் சிலுவை அடையாளத்துக்கு உண்டு.

உள்ளங்கையில் அதன் தோரணையைப் பொறுத்தே அது நேர்மறை அல்லது எதிர்மறை மாற்றத்தை ஒருவருக்கு அளிக்குமா என்பதை கூற முடியும்.

சிலுவை ரேகையை கொண்ட நபர்கள், சில கருத்து வேறுபாடுகளால் அவர்களின் எதிரிகளால் தாக்கப்படலாம் .


கோடுகள்

உள்ளங்கையில் அதிகம் காணப்படும் கோடுகள் பிரச்சனைகளையும் சமரசங்களையும் குறிக்கும்.

ஏதேனும் ஒரு பகுதியில் கோடுகள் இருந்தால், சீக்கிரமே தடுமாறக்கூடிய பாதுகாப்பற்ற தனிநபர்களாக அவர்கள் இருப்பார்கள்.

உள்ளங்கையில் உள்ள கோடுகள் சோர்வு, பதற்றம் மற்றும் எரிச்சல்படும் குணத்தையும் குறிக்கும்.


உள்ளங்கையில் தீவுகள்

உள்ளங்கையில் தீவுகளை கொண்ட நபர்கள் பயந்தவர்களாக, வலுவில்லா ஆரோக்கியத்துடன், வலுவில்லா இதயத்துடன், சுலபமாக சோர்வடைய கூடியவர்களாக இருப்பார்கள்.

ஆயுள் ரேகையில் தீவு உருவாக்கம் காணப்பட்டால், அந்த நபருக்கு தற்கொலை எண்ணங்கள் ஏற்படும்.


நட்சத்திரங்கள்

ஒரு நபர் நட்சத்திர வடிவிலான அடையாளத்தை தன் உள்ளங்கையில் கொண்டிருந்தால், அது அவரின் நல்ல எதிர்காலத்தை குறிக்கும்

ரேகையின் முடிவில் அது இருந்தால் அந்த நபர் பல விருதுகள், புகழ் மற்றும் சாதனைகளை தங்கள் வாழ்க்கையில் பெறுவார்கள். ஆனால் சனி ரேகையின் மீது இருந்தால் நட்சத்திரம் துரதிர்ஷ்டம், மோசமான தொழில் தெரிவுகள் மற்றும் உணாச்சி ரீதியான எழுச்சிகளைக் குறிக்கும்.


சதுரங்கள்

உள்ளங்கையில் உள்ள சதுர வடிவிலான உருவாக்கங்கள் பாதுகாப்பைக் குறிக்கும். சதுர அடையாளம் முறிவில்லா ரேகையின் மீது இருந்தால், அது மூச்சுத்திணறல் அல்லது சிறைக்கு செல்வதைக் குறிக்கும்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்