மகள் குறித்த வீடியோவை வெளியிட்டு கடும் விமர்சனத்துக்கு உள்ளான கோடீஸ்வரர்.... அதிர்ச்சியை ஏற்படுத்திய காட்சி

Report Print Raju Raju in மலேசியா

மலேசியாவை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் தனது மகளை பிரம்பால் அடித்து காயப்படுத்திய விடயத்தை சமூகவலைதளங்களில் தெரிவித்த நிலையில் அவரை பலரும் கடுமையாக திட்டி வருகிறார்கள்.

தாடுக் அலிப் ஷுக்ரி என்ற நபர் ஒப்பனை அலங்காரம் தொடர்பான தொழில் செய்து வரும் நிலையில் பெரிய கோடீஸ்வரராக வலம் வருகிறார்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில், அவரின் 9 வயது மகள் வலியால் அழுவது போலவும் அதற்கு அலிப் மகள் உடலில் மருந்து தடவுவது போலவும் இருந்தது.

அந்த பதிவில், நான் என் மகளை பிரம்பால் அடித்தேன், காரணம் அவள் ஹிஜாப் எனப்படும் தலையில் அணியும் முக்காடை யார் என்றே தெரியாத நபர் முன்னால் கழட்டியுள்ளார்.

இது தவறாகும், என் மகளின் செயலுக்கு பாடம் கற்பிக்க அவளை அடித்தேன், இந்த தவறை அவள் மீண்டும் செய்யக்கூடாது என தெரிவித்திருந்தார்.

அலிப் வெளியிட்ட வீடியோ வைரலான நிலையில் அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், கடுமையாக திட்டி வருகின்றனர்.

அலிப் தனது மகளை துன்புறுத்தியது தவறு, அதனால் அவர் தனது நற்பெயரை இழந்துவிட்டார் என விமர்சித்து வருகின்றனர்.

மேலும் அலிப் மீது மலேசியாவில் செயல்படும் அரசு சாரா குழந்தைகள் நல வாரியம் ஒன்று பொலிசில் புகார் அளித்துள்ளது.

குழந்தையை காயப்படுத்தியதோடு இது தொடர்பான வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டது பெரிய தவறு என புகார் கூறப்பட்டுள்ளது

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்