கத்தரிக்காய் பற்றிய சில உண்மைகள்

Report Print Deepthi Deepthi in மருத்துவம்

மனிதனின் ஆரோக்கியமான வாழ்விற்கு காய்கறிகளும், பழங்களும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

காய்கறி வகையை சேர்ந்த கத்திரிக்காய் தக்காளிக்கு நிகரான சத்துக்களை கொண்டுள்ளது என்பது சில பேருக்கு தெரியாததால், அதை சாப்பிடாமல் ஒதுக்கி வைக்கின்றனர்.

நீங்கள் நினைக்காத அளவுக்கு இந்த கத்தரிக்காயில் சிறந்த மருத்துவ குணங்கள் ஏராளமாய் உள்ளது. நீல நிறமுள்ள பிஞ்சு கத்தரிக்காய் உடலுக்கு நல்ல வளத்தையும், சத்துக்களையும் தருகிறது.

நீர்ச்சத்து, இரும்புச்சத்து, நார்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், கால்சியம், விட்டமின்கள் – A,C,B1,B2 போன்ற சத்துகள் கத்தரிக்காயில் நிறைந்து காணப்படுகிறது.

மேலும் தக்காளியை போலவே எடை, புரதம் கலோரி அளவு தாது உப்புகள் போன்றவை உள்ளன.

மருத்துவ பயன்கள்

நாக்கில் ஏற்படும் அலர்ஜியை போக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.

வாதநோய், ஆஸ்துமா, ஈரல்நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல் மற்றும் உடல்பருமன் போன்ற நோய்களை குணமாக்குகிறது.

கண் பார்வைத் திறனை அதிகரிக்கச் செய்கிறது, ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

பெருங்குடல் புற்று நோயிலிருந்து பாதுகாக்கும், நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.

குறிப்பு

கத்திரிக்காய் உடலுக்கு சூடு தரும் காய்கறி வகையை சார்ந்தது, எனவே உடம்பில் சொறி சிரங்கு, புண் உள்ளவர்கள் கத்திரிக்காய் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள் முதல் மூன்று மாதங்களுக்கு கத்திரிக்காயை சாப்பிடக்கூடாது.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments