தேனில் ஊறவைத்த வெங்காயம்: நன்மைகளோ ஏராளம்

Report Print Fathima Fathima in மருத்துவம்

நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் பொருள் தான் வெங்காயம்.

இதில் புரதச்சத்துக்கள், விட்டமின்கள் தாது உப்புக்கள் உள்ளன, பண்டைய காலம் முதலே மருத்துவத்துக்கு பயன்படுகிறது.

இதனை கொண்டு உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான சிரப் தயாரிக்கலாம்.

செய்முறை

மெல்லியதாக வெங்காயத்தை நறுக்கி கொள்ளுங்கள், ஒவ்வொரு வெங்காய ஸ்லைஸின் நடுவிலும் தேன் தெளித்து, ஒன்றின் மீது ஒன்றாக அடுக்குங்கள்.

ஒரு பவுல் / கப்-ல் தேனோடு ஊறவைத்த இந்த வெங்காயத்தை 24 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

மறுநாள் பவுலில் சேர்ந்திருக்கும் நீர்மம் போன்ற அந்த சிரப்பை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

சிரப்பை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
  • காய்ச்சலை சரிசெய்யும்.
  • தூக்கமின்மை பிரச்சனைக்கு தீர்வாகிறது.
  • சளித் தொல்லை நீங்கும்.
  • கொலஸ்ட்ரால் குறையும்.
  • சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கும்.
  • இரத்தத்தை சுத்தமாக்கும்.
  • செரிமானத்தை அதிகரிக்கும்.

இந்த சிரப்பை ஓரிரு வாரங்கள் முதல் ஒரு மாதம் வரை ஃபிர்ட்ஜில் வைத்து பயன்படுத்தி வரலாம் அல்லது தேவைக்கேற்ப அவ்வப்போது செய்து வருவதும் சிறந்தது.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers