கல்லீரலில் உள்ள அழுக்குகளை முற்றிலும் அகற்ற இதை குடிங்க!

Report Print Nalini in மருத்துவம்

நாம் சாப்பிடும் பல கொழுப்பு உணவுகளால் நம் உடலில் பல நச்சுக்கள் சேருகின்றன. இது அதிகமானால் முதலில் கல்லீரல் தான் பாதிக்கும்.

எனவே கல்லீரலை பாதுகாப்பாக வைத்து கொள்ள உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவது மிகவும் முக்கியம். அந்த வகையில் கல்லீரலில் உள்ள அழுக்குகளை முற்றிலும் அகற்ற இந்த பானங்களை குடிப்பதன் மூலம் அனைத்து அழுக்குகளும் வெளியேறி விடும்.

இந்த பானம் சக்தி வாய்ந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மஞ்சள், இஞ்சி, கேரட், ஆரஞ்சு போன்றவை கொண்டு தயாரிக்கப்படுகின்றன.

இந்த பானம் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவி செய்யும். உடல் எடையும் படிப்படியாக குறையும்.

தேவையான பொருட்கள்

  • கேரட் – 2 (சிறியது)
  • நற்பதமான மஞ்சள் – 2-3 செ.மீ
  • ஆரஞ்சு – 1
  • இஞ்சி – சிறிய துண்டு
  • எலுமிச்சை சாறு தேவைக்கேற்ப

செய்முறை

  • கேரட்டில் இருந்து தனியாக ஜூஸ்ஸையும், ஆரஞ்சு பழத்தில் இருந்து ஜூஸை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்பு இந்த இரண்டு ஜூஸ்களையும் பிளெண்டரில் ஊற்றி, அத்துடன் இஞ்சி மற்றும் மஞ்சளை சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டிக் கொள்ளணும்.
  • இறுதியில் வேண்டுமானால் சுவைக்கு சிறிது எலுமிச்சை சாற்றினை கலந்து கொள்ள வேண்டும்.
  • இதை குடித்தால் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் நீங்கி விடும்.
  • இந்த பானத்தை ஒருவர் அடிக்கடி குடிக்க உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதுடன், உடல் எடையும் குறைந்து, உடலில் தோல்கள் மிளிர செய்யும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்