சவுதியில் பெண்களுக்கு இந்த 5 செயல்களில் அனுமதி இல்லை

Report Print Fathima Fathima in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் பதவியேற்றதிலிருந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

வருகிற 24 முதல் சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்ட விதிக்கப்பட்டிருந்த தடை முடிவுக்கு வருகிறது.

எனினும் சவுதி பெண்களுக்கு அனுமதி இல்லாத செயல்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

  • ஆண் பாதுகாவலர்களின் அனுமதி இல்லாமல் சவுதி பெண்களால் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்க முடியாது.
  • ஆண் பாதுகாவலர் பெண்களின் தந்தை, சகோதரர், வேறு ஆண் உறவினர் போன்ற யாராகவும் இருக்கலாம். சில நேரங்களில், கணவரை இழந்த பெண்களின் பாதுகாவலராக அவர்களது மகன்களே இருப்பார்கள்.
  • தங்கள் பெயரில் கடவுச்சீட்டு வாங்கவும், வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவும் சௌதி பெண்களுக்கு ஆண் பாதுகாவலர்கள் அனுமதி தேவை.
  • வேலை செய்யவும், படிக்கவும், சில வகையான மருத்துவ சிகிச்சைகளை பெறவும் கூட ஆண் பாதுகாவலர்களின் ஒப்புதல் தேவை.
  • திருமணம் செய்யவும், திருமண உறவில் இருந்து விலகவும் சௌதி பெண்களுக்கு ஆண் பாதுகாவலரின் ஒப்புதல் தேவை.
  • உணவு விடுதி ஒன்றுக்குச் சென்று ஆண் நண்பர்களுடன் ஒன்றாக அமர்ந்து காஃபி கூட குடிக்க முடியாது, குடும்பம் மற்றும் பெண்கள் ஒரு இடத்திலும், தனியாக செல்லும் ஆண்கள் ஒரு இடத்திலும் உணவு உட்கொள்ள வேண்டும்.
  • பொதுஇடங்களில் பெண்கள் “அபயா” உடையை அணிய வேண்டும், இதனை பின்பற்றாதவர்கள் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்