ஆயிரக்கணக்கான வாகனங்களை மீள அழைக்கும் Jaguar

Report Print Givitharan Givitharan in வாகனம்

பிரித்தானியாவை தளமாகக் கொண்டு செயற்பட்டு வரும் ஆடம்பர கார் உற்பத்தி நிறுவனமாக Jaguar திகழ்கின்றது.

இந்த நிறுவனம் தனது ஆயிரக்கணக்கான டீசல் வாகனங்களை மீளப்பெற முடிவு செய்துள்ளது.

இதன்படி சுமார் 44,000 வாகனங்கள் மீள அழைக்கப்படவுள்ளது.

பிரித்தானிய அரசின் அங்கீகரிக்கப்பட்ட புகை வெளியேற்ற அளவை விடவும் அதிகமாக காபனீரொட்சைட்டினைக் கொண்ட புகையை வெளியேற்றுவதனாலேயே இவ்வாறானதொரு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இந்த வாகனங்கள் அனைத்தும் 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலப் பகுதியில் வடிவமைக்கப்பட்டவையாகும்.

மேலும் இவை 2.0L ரக டீசல் என்ஜினை உடையவையாகும்.

Jaguar XE, XF, E-Pace, F-Pace, and the Land Rover Discovery Sport, Range Rover Evoque, Range Rover Velar மற்றும் Range Rover Sport ஆகிய மொடெல் வாகனங்கள் இவற்றுள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்