சிறுநீர் கழித்த மாணவன்: 10,000 யூரோ அபராதம் விதித்த நிர்வாகம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
350Shares
350Shares
lankasrimarket.com

இத்தாலியில் சுற்றுலா சென்ற அமெரிக்க மாணவன் ஒருவன் வரலாற்று சிறப்புமிக்க ஹெர்குலஸ் சிலை அருகே சிறுநீர் கழித்ததால் பெருந்தொகை அபராதம் விதித்துள்ளனர்.

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தை சேர்ந்த 21 வயது மாணவன் தனது நண்பர்களுடன் இத்தாலிக்கு சுற்றுலா சென்றுள்ளான்.

இந்த நிலையில் செவ்வாய் காலையில் புளோரன்ஸ் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற Loggia dei Lanzi-ல் அவர்கள் சுற்றிப் பார்த்துள்ளனர்.

அப்போது குறித்த மாணவன் ஹெர்குலஸ் சிலை அருகே சிறுநீர் கழித்ததாக பிடிக்கப்பட்டுள்ளான்.

இது பொது ஒழுக்கத்துக்கு எதிரான செயல் என்பதால் நகர நிர்வாகம் குறித்த மாணவனுக்கு 10,000 யூரோ அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

Loggia dei Lanzi 1382-ல் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இத்தாலியில் வரும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதிகளில் மரியாதை குறைவாக நடந்து கொள்வது இது முதன் முறையல்ல.

கடந்த 2016 ஆம் ஆண்டு அரை நிர்வாண கோலத்தில் 3 இளம்பெண்கள் Fontana dell'Acqua Paola பகுதியில் நீச்சலிட்டுள்ளது சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்