11 சிறார்களை பட்டினியிட்டு கொடுமைப்படுத்திய 3 தாய்மார்கள்: பொலிசார் அதிரடி நடவடிக்கை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

மெக்சிகோ நாட்டில் ஒரே குடியிருப்பு வளாகத்தினுள் 11 சிறார்களை பட்டினியிட்டு கொடுமைப்படுத்திய 3 தாய்மார்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சிறார்களை துன்புறுத்திய குற்றத்திற்காக அவர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரணை காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.

கடந்த வெள்ளியன்று இந்த விவகாரம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிசார்,

அந்த வளாகத்தில் குடியிருக்கும் இஸ்லாமிய நபர் ஒருவரால் அந்த தாய்மார்கள் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளதாக ஞாயிறன்று தெரிவித்துள்ளனர்.

ஆனால் அந்த நபர் கடந்த டிசம்பர் மாதம் முதல் தமது 3 வயது மகனுடன் தலைமறைவானதாக கூறப்படுகிறது.

தற்போது அந்த நபரை பொலிசார் தேடி வருகின்றனர். முன்னதாக தலைமறைவானதாக கூறப்படும் சிராஜ் என்பவரை தேடிச் சென்ற பொலிசாருக்கு அந்த 11 சிறார்களில் ஒருவர், சாப்பிட்டு பல நாட்கள் ஆகின்றது எனவும் தங்களுக்கு உணவும் தண்ணீரும் வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனையடுத்தே பொலிசார் அந்த குடியிருப்பு வளாகத்தினுள் நுழைந்துள்ளனர். அப்போது தலைமறைவானதாக கருதப்படும் சிராஜ் என்பவர் பயங்கர ஆயுதங்களுடன் அங்கிருப்பது பொலிசார் கண்டறிந்தனர்.

குறித்த நபர் பொலிசாரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து பொலிசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை காரணமாக அங்கிருந்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்