இறந்துபோன தனது குழந்தையை 17 நாட்கள் தோளில் சுமந்து திரிந்த திமிங்கலம்: நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

அமெரிக்காவின் Hawaii மாநிலத்தில் தாய் திமிங்கலமானது இறந்துபோன தனது குட்டியை சுமார் 17 நாட்கள் சுமந்து திரிந்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1600 கிலோ மீட்டர் பயணத்திற்கு பின் தன் குட்டியை தூக்கி திரிவதை நிறுத்தி உள்ளது. பொதுவாக திமிங்கலம் இரண்டு வாரம் தம் இறந்த குட்டியை தூக்கி திரியும்.

இதன் மூலம், இந்த திமிங்கலமானது புதிய சாதனை படைத்துள்ளதாக கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.

ஜூலை 24 அந்த திமிங்கல குட்டி இறந்துபோயிருக்கலாம், ஆனால் அதன் இறப்பிற்கான காரணம் தெரியவில்லை. பிறந்த தன் குட்டி இறந்துபோனது தெரியாமல் சுமார் 17 நாட்கள் தனது முதுகில் மீது சுமந்தபடி இருந்துள்ளது தாய் திமிங்கலம்.

தாய் திமிங்கலத்தின் இந்த பாசம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்