யோகா பந்தை பயன்படுத்தி மனைவி, மகளை கொலை செய்த மருத்துவர்: வெளியான அதிர்ச்சி காரணம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சீனாவின் ஹாங்காங் நகரில் யோகா பந்தில் விஷ வாயுவை செலுத்தி மருத்துவர் ஒருவர் மனைவி மற்றும் மகளை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹாங்காங் நகரில் கடந்த 2015-ம் ஆண்டு இளம்பெண் மற்றும் அவரது 16 வயது மகள் ஆகியோர் காரில் பிணமாக கண்டெடுக்கப்பட்டனர்.

பிரேத பரிசோதனையில் அவர்கள் கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசித்ததால் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டது.

அதற்கு மேலாக எந்த தடயமும் கிடைக்காததால் பொலிசார் குழப்பமடைந்தனர். நீண்ட காலமாக எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் கிடைந்த இந்த வழக்கில், காரில் இருந்து கண்டெடுக்கப்பட்ட 2 காற்று இறங்கிய யோகா பந்துகள் மூலமாக விசாரணை சுறுசுறுப்படைந்தது.

இது தொடர்பாக ஹாங்காங் நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணையின்போது அரசுத்தரப்பு சமர்ப்பித்த அறிக்கையில்,

காரின் பின்பகுதியில் கிடந்த அந்த இரண்டு யோகா பந்துகளிலும் கார்பன் மோனாக்சைடு வாயு இருந்ததற்கான தடையம் உள்ளது.

கொலையான பெண்ணின் 53 வயதான கணவர் ஹா கிம்-சன் ஒரு மயக்கவியல் நிபுணர், சீன பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து வரும் அவருக்கு மாணவி ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

தனது தொடர்புக்கு குறுக்கே இருக்கும் மனைவியை யோகா பந்து திட்டத்தின் மூலம் கொலை செய்துள்ளார்.

ஆனால், மனைவிக்கு வைத்த குறியில் தனது மகளும் பலியாவார் என ஹா அறிந்திருக்கவில்லை. கொலை நடந்த சில நாட்களுக்கு முன்னர் பல்கலைக்கழகத்தில் இருக்கும் ஆய்வகத்தில் இரண்டு யோகா பந்துகளில் கார்பன் மோனாக்சைடு வாயுவை நிரப்பியுள்ளார்.

இது தொடர்பாக சக பணியாளர்கள் கேட்டபோது வீட்டில் உள்ள எலிகளை கட்டுப்படுத்துவதற்காக எடுத்துச் செல்வதாக ஹா கூறியுள்ளார் என அரசுத்தரப்பு அறிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கு தொடர்பாக விரைவில் தீர்ப்பு வெளியாகும் என தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்