அகதிகளை எட்டி உதைத்த விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு: உலகை உலுக்கிய வீடியோ காட்சி

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ஐரோப்பியத்திற்குள் நுழைய முயன்ற அகதிகளை எட்டி உதைத்த பெண் ஓளிப்பதிவாளரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு மத்திய கிழக்கு மக்கள் புகலிடம் தேடி ஐரோப்பியத்திற்குள் நுழைந்தனர். அதனை பல்வேறு தொலைக்காட்சிகளை சேர்ந்த பத்திரிக்கையாளர்களும் காட்சிகளாக பதிவு செய்து கொண்டிருந்தனர்.

அப்போது தனியார் தொலைக்காட்சியில் வேலை செய்து வந்த பெட்ரா லாஸ்லோ என்ற ஒளிப்பதிவாளர், மகளை தூக்கிக்கொண்டு ஓடிவந்த தந்தை ஒருவரை காலால் எட்டி மிதித்தார். அதனை தொடர்ந்து ஒரு சிறுமியையும் காலால் எட்டி மிதித்தார்.

இந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியானதை தொடர்ந்து உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு நாட்டு தலைவர்களும் இதற்கு தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்த வழக்கினை விசாரித்த கீழ்நீதிமன்றங்கள், பெட்ராவிற்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து பெட்ரா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த நிலையில் வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம், பெட்ரோவின் செயல் எந்த குற்றங்களையும் விளைவிக்கவில்லை எனவும், அதனை கிரிமினல் குற்றமாக கருதமுடியாது எனவும் கூறி விடுதலை செய்தது.

அதேசமயம் அவரது செயல், "ஒழுக்கம் தவறிய மற்றும் சட்டவிரோத" செயல் எனவும் கூறி எச்சரிக்கை விடுத்தது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்