ஒரே பதிலால் உலக மக்களின் மனதை கொள்ளையடித்த பிரபஞ்ச அழகி

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

தாய்லாந்தில் நடைபெற்ற பிரபஞ்ச அழகிப் போட்டியில் பிலிப்பைன்ஸை சேர்ந்த கேட்ரியோனா எலிஷா க்ரே (Catriona Elisa Gray ) பிரபஞ்ச அழகியாக மகுடம் சூடினார்.

இரண்டாவது இடத்தை தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த பெண்ணும் மூன்றாவது இடத்தை வெனிசுலாவைச் சேர்ந்த அழகிகளும் தட்டிச் சென்றனர்.

பிரபஞ்ச அழகி க்ரே அங்கிருந்த பார்வையாளர்கள் மனதைக் கொள்ளையடித்துவிட்டார் .

இறுதிச் சுற்றில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு க்ரே அளித்த பதில் உலக மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

நீங்கள் உங்கள் வாழ்வில் கற்றுக்கொண்ட மிக முக்கிய பாடம் எது? அதை எவ்வாறு பிரபஞ்ச அழகிப் போட்டிக்குப் பயன்படுத்தினீர்கள்? என அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, ``நான் மனிலாவின் குடிசைப் பகுதிகளில் அதிகம் வேலை செய்துள்ளேன்.

அங்குள்ளவர்கள் வறுமையிலும் சோகத்திலும் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வறுமையை நினைத்து வாடவில்லை. அவர்கள் முகங்களில் உண்மையான சந்தோஷத்தைப் பார்த்தேன்.

அதில்தான் அழகு உள்ளது என நான் நம்புகிறேன். அங்குள்ள குழந்தைகள் முகத்தில் இருந்த சிரிப்பில் பேரழகைப் பார்த்துள்ளேன். அதே மனநிலையுடன்தான் இந்தப் பிரபஞ்ச அழகிப் போட்டியையும் பார்க்கிறேன். அனைத்து எதிர்மறையான விஷயங்களிலும் ஓர் நேர்மறை உள்ளது என பதிலளித்தார்.

வெறும் 3 மணி நேரம் மட்டுமே நடைபெற்ற இந்த நிகழ்ச்சி ஒட்டுமொத்த உலக மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தாய்லாந்தில் இந்த அழகிப் போட்டி நடைபெற்றது. 94 நாடுகளைச் சேர்ந்த 92 அழகிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்