இரண்டு ஆண்டுகள் கோமாவிலிருந்த காதலிக்கு காதலன் செய்த செயல்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

இரண்டு ஆண்டுகளாக தனது காதலி கோமாவிலிருந்தும், அவளை பார்த்துக் கொள்வதற்காக தன் வேலையை விட்ட அவளது காதலன், அவளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள, ஒரு நாள் கண் விழித்த அந்த இளம்பெண், தானும் அவரை உயிருக்கு உயிராக காதலிப்பதை நிரூபித்துக் காட்டியது கண்டு அவளது குடும்பமே ஆச்சரியத்தில் மூழ்கியது.

சீனாவைச் சேர்ந்த Jiafengஇன் காதலியான Xiaoyu, மூளை அறுவை சிகிச்சை ஒன்றின்போது கோமாவில் மூழ்கினார்.

அதற்கு முன் இருவரும் ஓராண்டு ஒருவரையொருவர் காதலித்திருந்த நிலையில், Xiaoyuவின் பெற்றோர் இனி தங்கள் மகளை விட்டு பிரிவதே Jiafengக்கு நல்லது என்று கூறியுள்ளனர்.

Xiaoyuவின் பெற்றோர் முன் மண்டியிட்டு, தனது காதலியை கவனித்துக் கொள்ள தன்னை அனுமதிக்குமாறு கண்ணீருடன் Jiafeng கேட்டுக் கொண்டதையடுத்து, அவர்களால் அவருக்கு மறுப்பேதும் கூற இயலவில்லை.

இரண்டு ஆண்டுகள் சற்றும் தளராமல் Xiaoyuக்கு டியூப் வழியாக உணவளித்து, அவளை குளிப்பாட்டி, அவள் உடலில் புண் ஏதும் வந்து விடாமல், கண் போல் காத்துக் கொண்ட Jiafeng, என் காதலி ஒரு நாள் கண்டிப்பாக கண் விழிப்பாள், நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என்று கூறியதோடு, தான் கூறியதை உறுதியாக நம்பவும் செய்தார்.

அவர் நம்பிக்கை வீண் போகவில்லை, இரண்டாண்டுகளுக்குப் பின் அவர் சொன்னதுபோலவே Xiaoyu கண் விழித்தாள்.

அதோடு முடிந்துவிடவில்லை அந்த அற்புதம், கண் விழித்ததும் முதல் முதலாக தனது காதலனின் பெயரைச் சொல்லி Xiaoyu அழைக்க, கூடியிருண்டவர்கள் அவர்கள் இருவரின் காதலின் வலிமையைக் கண்டு ஆச்சரியப்பட்டதோடு, ஆனந்தக் கண்ணீரும் வடித்தனர்.

தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளதோடு, இணைந்து உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.

Xiaoyuக்கு இன்னும் ஒரு அறுவை சிகிச்சையும், தொடர்ந்து பல சிகிச்சைகளும் தேவைப்படும் நிலையில், தொடர்ந்து அவளுக்கு தன்னாலான உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார் Jiafeng.

Xiaoyu முற்றிலும் குணம் பெற வேண்டும், தங்களுக்கு ஒரு வாரிசைப் பெற்று கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார்கள் இந்த அற்புத காதல் தம்பதியினர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers