எனது காதலியுடன் உயிர் நண்பன் ஓடி போய்விட்டான்: தற்கொலை செய்த இளைஞரின் கண்ணீர் கடிதம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

காதலி தனது நீண்டகால நண்பனுடன் ஓடி போன விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கென்யாவின் நகுரூ நகரை சேர்ந்த இளைஞர் ஒருவர் இளம் பெண் ஒருவரை தீவிரமாக காதலித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று நெடுஞ்சாலைக்கு வந்த இளைஞர் சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த லொறி முன்னால் குதித்தார்.

இதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

அங்கு வந்த பொலிசார் இளைஞரின் சடலத்தை கைப்பற்றிய நிலையில் அவர் பாக்கெட்டில் இருந்த கடிதத்தையும் கைப்பற்றினார்கள்.

அதில், என் காதலியை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட நினைத்திருந்தேன்.

ஆனால் என் நீண்டகால நண்பனுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டு இருவரும் ஓடிபோய்விட்டனர்.

என்னுடைய கடைசி ஆசை என்னவென்றால் என்னுடைய இறுதிச்சடங்கில் அவர்கள் இருவரும் கலந்து கொள்ளக்கூடாது என்பது தான் எழுதியுள்ளார்.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers