விமானத்தில் ஒலித்த எச்சரிக்கை அலாரம்: அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்! பரபரப்பு பின்னணி

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

பீஜிங்கிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் புறப்பட்ட விமானம் ஒன்றில் திடீரென நெருப்பு பற்றியதை அறிவிக்கும் அலாரம் ஒலிக்க, உடனடியாக விமானம் ரஷ்யாவில் தரையிறக்கப்பட்டதாக சற்றுமுன் வெளியான தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

ஏர் சைனா, போயிங் 777 ரக விமானம் ஒன்றில் பயணிகளின் உடைமைகள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் நெருப்பு பற்றியதை குறிக்கும் அலாரம் ஒலித்துள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அந்த விமானம், உடனடியாக ரஷ்ய விமான நிலையம் ஒன்றில் தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் பயணம் செய்த 188 பயணிகளும் என்ன நடக்கிறதென்று அறியாமல் திகைக்க, விமானம் தரையிறங்கியதும், விமான பணிப்பெண் ஒருவர், பொருட்களை போட்டு விட்டு உடனடியாக கீழே இறங்குங்கள், விமானம் வெடிக்கப்போகிறது என்று அறிவிக்க, விமானத்துக்குள் ஒரே குழப்பம்.

பயணிகள் ஒருவரையொருவர் தள்ளிக் கொண்டு அடித்துப் பிடித்து அவசர வழியாக விமானத்திலிருந்து குதித்தனர்.

ஆனால் விமானம் தீப்பற்றியதாக உறுதியான தகவல் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ள ரஷ்ய அதிகாரிகள், பயணிகள் பத்திரமாக சகல வசதிகளுடனும் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், உணவும், மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

பயணிகளை அழைத்து செல்ல சீனாவிலிருந்து மாற்று விமானம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்