தீவிரவாதி அதிகம் கேட்ட பாடல்... ஆசியர்கள் மீது வெறுப்பு: நியூசிலாந்து துப்பாக்கிச் சூடு முழு அறிக்கை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலிலிருந்து குடிபுகுந்தவர்களை நாட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டும் என்று நியூசிலாந்தில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட தீவிரவாதி பிரென்டன் டரேன்ட் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரண்டு மசூதிக்குள் நேற்று அதிரடியாக நுழைந்த மர்ம நபர் ஒருவர், கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 49 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடுவதற்கு முன்னதாக, துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் 87 பக்கங்கள் கொண்ட அறிக்கையை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளார்.

87 பக்கங்கள் கொண்ட அறிக்கைக்கு "ஒரு மிகப்பெரிய மறுகுடியமர்த்தல்" (The Great Replacement) என்று பெயரிடப்பட்டுள்ள அந்த அறிக்கையானது,

எப்படி வெள்ளை ஐரோப்பியர்களின் இருப்பிடங்கள் திட்டமிட்டு வெள்ளையர்கள் அற்றவர்களால் நிரப்பப்படுகிறது என்று அதிகமாக வலதுசாரி தன்மை கொண்ட கான்பிரசி தியரிகளை (conspiracy theories) உள்ளடக்கியதாக உள்ளது.

இந்தியா, சீனா, துருக்கியிலிருந்து படையெடுப்பாளர்கள் இங்கே வருகின்றனர். கிழக்குப் பகுதியிலுள்ள இந்தியா, சீனா, துருக்கி ஆகிய நாடுகள் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிரி நாடுகளாக உள்ளன.

ஐரோப்பிய மண்ணிலிருந்து படையெடுப்பாளர்களை அகற்றவேண்டும். அவர்கள், நம்முடைய மக்கள் இல்லையென்றால், அவர்கள் நம்முடைய நிலத்திலிருந்து வெளியேற வேண்டும்.

அவருடைய அறிக்கையின் தலைப்பு ப்ரெஞ்ச் எழுத்தாளர் ரினௌட் கேமஸின் கருத்தாக்கமான வெள்ளையர்கள் இனப்படுகொலை (white genocide) என்பதை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.

மேலும், பிரென்டன் டரேன்ட், 2011 ஆம் ஆண்டில் நார்வேயில் 77 பேரைக் கொலை செய்த தீவிரவாதியான அன்டெர்ஸ் பெஹ்ரிங் ப்ரிய்விக்கின் பன்முக கலாச்சாரத்தன்மைக்கு எதிரான பேச்சால் தூண்டப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்புக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரென்டன் டரேன்ட், ட்ரம்ப் வெள்ளை மக்களின் பிரதிநிதியாக உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். அவர், கடந்த இரண்டு வருடங்களாக இந்த தாக்குதலுக்கு திட்டமிட்டேன், கிரிஸ்ட்சர்ச் மசூதியில் தாக்குதல் நடத்தவேண்டும் என்பதை மூன்று மாதங்களுக்கு முன்பு திட்டமிட்டேன் என்றும் குறிபிட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட தீவிரவாதி பிரென்டன் டரேன்ட், செர்பியன் போர் குற்றவாளி ரேடூவன் காரட்சிக்கைப் பற்றிய ‘செர்பியாவை காரட்சிக் வழி நடத்துவார்(Karadzic lead your Serbs)’ என்ற பாடலை கேட்டுள்ளார் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்