கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளப்பட்ட அப்பாவி மக்கள்: பிணக்குவியலான கிராமம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் இரு பிரிவினருக்கு இடையே நடந்த மோதலில் சுமார் 134 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.

மாலியில் வேட்டைக்காரர்களான தோகோன் பழங்குடியினருக்கும், புலானி விவசாயிகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது.

தோகோன் பழங்குடியினர் அவ்வப்போது புலானி மக்கள் மீது கொடூர தாக்குதலை நடத்தி ஏராளமானவர்களை கொன்று குவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மோப்டி பிராந்தியத்தில் புலானி மக்கள் அதிகம் வசிக்கும் ஒக்சாகாகோவ் கிராமத்துக்குள் நேற்று முன்தினம் தோகோன் இனத்தவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்துள்ளனர்.

அங்கு அவர்கள் ஒவ்வொரு வீடாக சென்று கண்ணில் பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர்.

மட்டுமின்றி கத்தி, அரிவாள் போன்ற கூர்மையான ஆயுதங்களால் பலரை வெட்டி சாய்த்துள்ளனர்.

ஈவு இரக்கமின்றி நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலில் குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்பட 134 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து ஒட்டுமொத்த கிராமத்தையும் சூறையாடிவிட்டு தோகோன் இனத்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த கொலைவெறியாட்டம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மாலியில் சுமார் 3 மில்லியன் புலானி இன மக்கள் குடியிருக்கின்றனர். இவர்கள் பாரம்பரியமாக நாடோடிகளாகவும் பெரும்பாலும் இஸ்லாமியர்களாகவும் உள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்