பொது கழிப்பறைக்குள் சென்ற அழகான இளம் திருநங்கைக்கு நேர்ந்த கதி! நள்ளிரவில் எடுக்கப்பட்ட வீடியோ வெளியானது

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

பிலிப்பைன்ஸில் பெண்கள் கழிவறைக்குள் சென்ற இளம் திருநங்கைக்கு நடந்த மோசமான அனுபவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிரிட்சென் கஸ்டோடிஸ் (28) என்பவர் திருநங்கை ஆவார். இவர் அங்குள்ள வணிக வளாகத்துக்கு சென்ற நிலையில் பெண்கள் கழிப்பறைக்குள் சென்றார்.

அப்போது அங்கிருந்த கழிப்பறையை தூய்மைப்படுத்தும் பெண் கிரிட்செனை பார்த்து நீ ஏன் பெண்கள் கழிப்பறைக்கு வந்தாய் என கேட்டார்.

மேலும் உனக்கு ஆணுறுப்பு இருப்பதால் நீ இங்கு வரக்கூடாது என அவரை தரதரவென இழுத்து கொண்டு வெளியில் வந்தார்.

இதையடுத்து அவர் செல்போன் பறிக்கப்பட்டதுடன், அந்த பெண், கிரிட்சென் தலையில் அடிக்க முயன்றார்.

பின்னர் இது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் கிரிட்செனை கைது செய்தனர்.

கைவிலங்கு மாட்டப்பட்ட நிலையில் காவல் நிலையத்துக்கு நள்ளிரவு 11.30 மணியளவில் அழைத்து செல்லப்பட்ட கிரிட்சென் அங்கு உட்கார வைக்கப்பட்டார்.

இது தொடர்பான வீடியோ காட்சி வெளியானது, இந்த சூழலில் கிரிட்சென் மீது எது தொடர்பில் வழக்குப்பதிவு செய்வது என பொலிசார் குழம்பினர்.

அப்போது அவர் மீது புகார் கொடுத்த கழிப்பறையை தூய்மைப்படுத்தும் பெண் தன்னுடைய புகாரை திரும்ப பெற்று கொள்வதாக கூறியதோடு, கிரிட்செனிடம் மன்னிப்பு கோரி கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.

அதில், நான் தவறு செய்துவிட்டேன், நானும் சராசரி மனிதன் தான், அவர் மீது குற்றசாட்ட வேண்டும் என்பது என் நோக்கமில்லை என தெரிவித்துள்ளார்.

இதனிடையில் பெரிய தவறு எதுவும் செய்யாத கிரிட்சென் கைது செய்யப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், கிரிட்சென் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்