பிரான்ஸ் சர்வதேச விமானநிலையத்தில் நபர் கைது... காதலி கொடுத்த தகவலால் அதிரடி நடவடிக்கை

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பிரான்சில் சர்வதேச விமானநிலையத்தில் கை கத்தியுடன் இருந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தலைநகர் பாரிஸில் இருக்கும் ஓர்லி சர்வதேச விமானநிலையத்தில் இருந்து கடந்த வியாழக்கிழமை, பெண் ஒருவருக்கு பொலிசாருக்கு தொடர்பு கொண்டு, கத்தியுடன் ஒரு நபர் சுற்றுவதாக தகவல் தெரிவித்துள்ளார்.

அதன் பின் குறித்த இடத்திற்கு வந்த பொலிசார், அந்த நபரின் பைக்குள் இருந்து கத்தி ஒன்றை மீட்டுள்ளனர். அதன் பின் மேற்கொண்ட விசாரணையில், உடன் பயணித்த பெண் குறித்த நபரின் காதலி எனவும், வாக்குவாதம் ஒன்றின் பின்னர் அப்பெண்ணை கத்தியாக தாக்க திட்டிமிட்டிருந்து தெரியவந்துள்ளது.

இதன் காரணமாகவே அப்பெண் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட நபர் இது தொடர்பான போதிய விளக்கம் அளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக திங்கட்கிழமை, சாள்-து-கோல் விமான நிலையத்துக்கு பெண் ஒருவர் கைத்துப்பாக்கியுடன் வந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்