சிரியாவில் வான்வழி தாக்குதலை முன்னெடுத்த துருக்கி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்காவுக்கு துணை நின்ற குர்து படைகளுக்கு எதிராக துருக்கி ராணுவம் களமிறங்கியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிரியாவில் இருந்து தமது படைகளை விலக்கிக்கொள்வதாக அறிவித்த நிலையில், தற்போது வடகிழக்கு சிரியா எல்லையில் துருக்கி ராணுவம் நுழைந்துள்ளது.

இதனையடுத்து சிரியா தேசிய ராணுவத்துடன் இணைந்து துருக்கி ராணுவம் தற்போது குர்துகளுக்கு எதிராக தாக்குதலை முன்னெடுத்துள்ளது.

தங்கள் நாட்டின் தெற்கு எல்லையில் இன்னொரு பயங்கரவாத குழு உருவாவதை தடுப்பதற்காகவே சிரியா மீது இந்த ராணுவ நடவடிக்கை என துருக்கி ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதனிடையே துருக்கியின் இந்த ராணுவ நடவடிக்கைக்கு எதிராக மனிதாபிமான பேரழிவிற்கு" வழிவகுக்கும் துருக்கியின் உடனடி ராணுவ நடவடிக்கையை எதிர்க்க சிரியாவின் குர்துகள் எல்லைக்குச் செல்ல பொதுமக்களுக்கு "பொது அணிதிரட்டல்" அழைப்பை வெளியிட்டு உள்ளன.

இந்த நிலையில் துருக்கியின் எல்லைப்புறத்தில் ஈரான் படைகள் ராணுவப் பயிற்சி மேற்கொண்டுள்ளன. இதன் காரணமாக ஈரான் - சிரியா - துருக்கி எல்லைகளில் பதற்றம் நிலவுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்