மசூதி மீது தண்ணீர் பீரங்கி தாக்குதல்.. வெளியான வீடியோவால் பதற்றம்: தலைவர்கள் பகிரங்க மன்னிப்பு

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஹாங்காங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போராடத்தின் போது, பொலிசார், Kowloon-ல் உள்ள மசூதிக்கு வெளியே நின்றுக்கொண்டிருந்த நபர்கள் மீது தண்ணீர் பீரங்கி தாக்குதல் நடத்தினர்.

விசாரணையில், மசூதிக்கு வெளியே இருந்தவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் என தெரியவந்ததாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டது.

இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஜனநாயக சார்பு சட்டமன்ற உறுப்பினர் ஜெர்மி டாம், அந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்து தனது பக்கத்தில் வெளியிட்டார்.

மேலும், அவரும், இந்திய தொழிலதிபரும், சிறுபான்மையினருக்கான தொண்டு நிறுவனத்தின் தலைவருமான இரண்டு பேர் காயங்களை சரிபார்க்க மருத்துவமனைக்குச் சென்றதாகக் கூறினார்.

இந்நியைில், மசூதி மீது பொலிசார் நடத்திய தண்ணீர் பீரங்கி தாக்குலுக்கு ஹாங்காங் தலைவர்கள், முஸ்லீம் தலைவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளனர்.

நகரத்தின் தலைவர், தலைமை நிர்வாகி Carrie La மற்றும் காவல்துறைத் தலைவர் ஆகியோர் Kowloon-ல் உள்ள மசூதிக்குச் சென்று தலைமை இமாம் மற்றும் முஸ்லீம் சமூகத் தலைவர்களிடம் மன்னிப்பு கோரினர்.

அவர்கள் மன்னிப்பு கோரியதை ஊடகத்தினரிடம் உறுதிப்படுத்திய முஸ்லீம் தலைவர்கள், இதில் மசூதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஒரே ஒரு பிரச்னை தான் அவர்கள் இங்கு அதை செய்திருக்ககூடாது. அதற்காக அவர்கள் மன்னிப்பு கோரியதை நாங்கள் ஏற்றுக்கொண்டோம் என தெரிவித்தனர்.

இதுதொடர்பில் பொலிஸ் தரப்பில் மன்னிப்பு அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. அதில். இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் குழுவினரிடம் நாங்கள் பகிரங்க மன்னிப்பு கோருகிறோம். எந்த உள்நோக்கத்துடனும் இச்செயலில் ஈடுபடவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்