துணிக்கடையில் சந்தேகத்துக்கிடமான முறையில் சிக்கிய இளம்பெண்: என்ன செய்தார் தெரியுமா?

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

துணிக்கடையில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய இளம்பெண்ணை பிடித்த பாதுகாவலர்கள் அவரிடம் எதுவும் இல்லாதது கண்டு வியந்துள்ளனர்.

பின்னர்தான் தெரியவந்துள்ளது அவர் திருடியது ஜீன்ஸ் பேண்ட்களை என்பது!

அந்த பெண் எட்டு ஜீன்ஸ் பேண்ட்களை திருடி உடைமாற்றும் அறைக்கு கொண்டு சென்று அவற்றை ஒன்றன் மீது ஒன்றாக அணிந்துகொண்டிருக்கிறார்.

வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், அவர் ஒவ்வொரு ஜீனாக கழற்ற, பின்னணியில் ஒருவர் 1,2 என எண்ணும் சத்தம் கேட்கிறது.

எட்டு பேண்ட்களை கழற்றிய அந்த இளம்பெண் அப்பாவியாக இதற்கு மேல் தன் உள்ளாடைதான் இருக்கிறது என்கிறார்.

இந்த சம்பவம் வெனிசுலாவில் நடந்துள்ள நிலையில், பெரு நாட்டில் இந்த வீடியோ வைரலாகி 2.5 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது.

வீடியோவைப் பார்த்த ஒருவர், இவளையெல்லாம் பிடித்து ஜெயில்ல போடணும் சார் என்கிற தோரணையில் கமெண்ட் செய்ய, மற்றொருவரோ, எட்டு பேண்ட் போட்ட பிறகும் அந்த பெண் குண்டாக தெரியவில்லை, அப்படி மெலிந்து போய் இருக்கிறார், அவருக்கு என்ன கஷ்டமோ பாவம் என்று கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்