பழி தீர்த்த ஈரான்... ஆபத்தான நிலையில் அமெரிக்க துருப்புகள்: வெளியான உத்தியோகப்பூர்வ தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

அமெரிக்க தளங்கள் மீது ஈரானிய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து 34 அமெரிக்க துருப்புக்கள் மூளையில் காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுவதாக பென்டகன் உறுதிப்படுத்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் ஈரானிய முக்கிய தளபதி குவாசிம் சுலைமானியின் படுகொலைக்கு பதிலடியாக ஜனவரி 8 அதிகாலையில் ஈரானிய ராணுவம் குறித்த தாக்குதலை முன்னெடுத்தது.

அதிரடி ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து 80 அமெரிக்க துருப்புகள் கொல்லப்பட்டதாக ஈரானிய செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.

ஆனால் குறித்த தகவலானது பொய் எனவும், அமெரிக்க துருப்புகள் ஈராக்கில் பாதுகாப்பாக உள்ளனர் எனவும் டிரம்ப் அரசாங்கம் அறிவித்தது.

இதனிடையே புதனன்று பேசிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஈரானிய ஏவுகணை தாக்குதலுக்கு பின்னர் லேசான தலைவலியுடன் சில ராணுவத்தினர் மருத்துவ உதவியை நாடியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஈரானிய ஏவுகணை தாக்குதலுக்குப் பிறகு உடனடியாக அறிகுறிகள் தெரிவிக்கப்படவில்லை என்றும் சில சந்தர்ப்பங்களில் சில நாட்களுக்குப் பிறகு தெரியவர வாய்ப்புள்ளது என ராணுவம் கூறியுள்ளது.

இதனிடையே ஈராக்கில் இருந்து ரகசியமாக அமெரிக்க துருப்புகள் ஜேர்மனியில் சிகிச்சைக்காக சென்று வந்துள்ளது அம்பலமானது.

முதலில் 11 பேர் மூளையில் பாதிப்புடன் கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டன்,

காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 என இன்று உறுதி செய்துள்ளது. இதில் 17 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆனால் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், தாக்குதலுக்கு இரையான தளங்கள் சேதமின்றி தப்பியதாக முன்னர் அறிவித்த அமெரிக்கா, பின்னர் உருக்குலைந்த புகைப்படங்கள் வெளியானதும் அதை ஒப்புக்கொண்ட சம்பவத்தை அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்