இராணுவ முகாம்கள் மீது குண்டு மழை... உடல் சிதறி இறந்த துருப்புகள்: வெளிவரும் கொடூரம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சிரியாவில் ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டதில் 40 ராணுவவீரர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிரியாவின் இத்லீப் மாகாணம் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்களிடம் இருந்து மாகாணத்தை மீட்க ர‌ஷ்ய படைகளின் உதவியுடன் சிரியா ராணுவம் கடுமையாக போராடி வருகிறது. இருப்பினும் குறித்த மாகாணத்தில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் காலூன்றி தாக்குதல் முன்னெடுத்து வருகின்றன.

இந்த நிலையில் இத்லீப் மாகாணத்தின் சமாகா மற்றும் ஹவாய்ன் நகரங்களில் உள்ள 2 ராணுவ முகாம்களை குறிவைத்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் முன்னெடுத்துள்ளனர்.

400-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் 40 ராணுவவீரர்கள் பலியானதாகவும் சுமார் 80 பேர் படுகாயம் அடைந்தனர் எனவும் தெரியவந்துள்ளது.

அதே வேளை ராணுவத்தினர் மேற்கொண்ட பதில் தாக்குதலில் 50 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் 90 பயங்கரவாதிகள் பலத்த காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்