கொரோனா வைரஸ் குறித்து முதன்முதலில் தகவல் அனுப்பியவர்களை சீனா என்ன செய்துள்ளது தெரியுமா?

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

முதன்முதலில் கொரோனா வைரஸ் குறித்து குறுஞ்செய்திகளை தங்களுக்குள் பகிர்ந்துகொண்ட எட்டு பேரை சீன அதிகாரிகள் கைது செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், அதாவது இரண்டு மாதங்களுக்கு முன், வாட்ஸ் ஆப் போல் சீனாவில் குறுஞ்செய்தி அனுப்ப பயன்படுத்தப்படும் வீ சாட் என்னும் ஆப்பில், எட்டு பேர் தங்களுக்குள் கொரோனா வைரஸ் குறித்த செய்திகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

உடனடியாக, வதந்திகளை பரப்பியதாக அவர்கள் எட்டு பேரையும் கைது செய்த பொலிசார், இதுபோன்ற போலியான செய்திகளை இனி பரப்ப மாட்டோம் என எழுதி, அதில் கையெழுத்து வாங்கியதோடு, அவர்களது விரல் ரேகைகளையும் பதிவு செய்து கொண்டுள்ளனர்.

ஆனால் உண்மையாகவே பரவிய கொரோனா வைரஸ் சுமார் 425 பேர் வரை பலிவாங்கிவிட்டது.

லண்டனின் பாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Dr.யுக்தேஷ்வர் குமார் கூறும்போது, அப்போதே சீனா அந்த விடயத்தை சீரியஸாக எடுத்துக்கொண்டு ஆவன செய்திருக்குமானால், இந்த அளவுக்கு நிலைமை மோசமாகியிருக்காது என்கிறார்.

அன்று, கொரோனா வைரஸ் குறித்து கூறியவர்கள் அளித்த தகவலைக் கேட்டு சரியாக விசாரித்திருந்தால், அவர்களுக்கு டிசம்பரிலேயே கொரோனா வைரஸ் குறித்து தெரியவந்திருக்கும்.

thesun

மக்கள் பயணிப்பதை அப்போதே சீன அரசு தடை செய்திருக்க முடியும் என்கிறார் Dr.குமார்.

சீனா வுஹான் நகரம் முழுவதற்குமான போக்குவரத்தை முற்றிலும் நிறுத்து விட்டது பாரட்டுக்குரிய விடயம்தான்.

ஆனால், அன்று அந்த எட்டு பேர் சொன்னதையும் கேட்டு, சில அறிவியலாளர்களிடமும் அது குறித்து கலந்தாலோசித்திருந்தால், நிலைமை இந்த அளவுக்கு மோசமடைந்திருக்காது என்கிறார் Dr.குமார்.

Credit: AP:Associated Press

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்