இனி இந்த விலங்குகளை உண்ணுவதற்கு தடை: சீன வரலாற்றில் கொரோனாவால் ஒரு அசாதாரண சட்டம்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

கண்ணில் பட்ட விலங்குகளையெல்லாம் சாப்பிட்டு வந்த சீன நகரம் ஒன்றில், கொரோனா தொற்றையடுத்து, இனி நாய்களையும் பூனைகளையும் உண்ணக்கூடாது என்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.

விலங்குகள் நல ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக செய்ய நினைத்து தோற்ற விடயத்தை கொரோனா சாதித்துள்ளது.

அவர்கள் செல்லப்பிராணிகளை உண்ணுவதற்கு தடை விதிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக அரசை கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.

ஆனால் அதற்கெல்லாம் எந்த பலனும் கிடைக்காத நிலையில், வரலாற்றிலேயே முதல் முறையாக சீன நகரமாகிய Shenzhen, செல்லப்பிராணிகளை உண்ணுவதற்கு தடை விதித்து சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது.

13 மில்லியன் குடிமக்களைக் கொண்ட Shenzhen நகரில், நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளார்கள்.

இந்த புதிய சட்டம் மே மாதம் ஒன்றாம் திகதியிலிருந்து அமுலுக்கு வருகிறது. இது வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு என தொண்டு நிறுவனம் ஒன்று இந்த சட்டத்தை புகழ்ந்துள்ளது.

நாய்கள் மட்டுமின்றி, பாம்புகள், தவளைகள் மற்றும் ஆமைக்கறி உண்ணவும் இந்த சட்டம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்