ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலை கேலி செய்யும் வகையில் ஈரான் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தி பயிற்சி மேற்கொண்டுள்ளது.
வளைகுடா கடலில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்த நேரத்தில் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் 14 என்று பெயரிடப்பட்ட இந்த பயிற்சிகள் ஈரான் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன.
அமெரிக்கா வழக்கமாக வளைகுடாவில் பயணிக்கும் விமானம் தாங்கிக் கப்பலை போலவே போலி கப்பலை வடிவமைத்து அதன் இருபுறமும் போலி போர் விமானங்களை வைத்து ஈரான் இந்த பயிற்சியை மேற்கொண்டுள்ளது.
#Iran targets mock-up of a US aircraft carrier with missiles during military exercises
— EHA News (@eha_news) July 28, 2020
The mock-up of a Nimitz-class aircraft carrier was targeted with missiles during ''Prophet Mohammed 14th" exercises near the Strait of Hormuz. pic.twitter.com/w02TQumq0b
போலி கப்பலை சுற்றி பல்வேறு கோணங்களில் இருந்து ஏவுகணைகளை ஏவி பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது, அவற்றில் சில கப்பலில் இருந்த போலி விமானங்களை குறிவைத்துள்ளன.
ஈரான் ஹெலிகாப்டரில் இருந்து சுடப்பட்ட மற்றொரு ஏவுகணை போலி போர்க்கப்பலின் ஒரு பக்கத்தைத் தாக்கியது.
இந்த பயிற்சி ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் கத்தாரில் உள்ள அமெரிக்க படைகள் எச்சரிக்கையுடன் இருக்க வழிவகுத்ததாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க கடற்படையின் பஹ்ரைனை தளமாகக் கொண்ட ஐந்தாவது கடற்படையின் செய்தித் தொடர்பாளர் கமாண்டர் ரெபேக்கா ரெபரிச் கூறுகையில், கடல்சார் பாதுகாப்பை ஊக்குவிக்கும் வகையில் தற்காப்புப் பயிற்சிகளை அமெரிக்க கடற்படை கூட்டுப்படைகளுடன் நடத்துகிறது.
அதேசமயம், ஈரான் தாக்குதல் பயிற்சிகளை நடத்துகிறது, மிரட்டவும் மோதலை தூண்டவும் ஈரான் முயற்சிக்கிறது என தெரிவித்துள்ளார்.