தாயாருடன் மாயமான 4 வயது சிறுவன்... சிதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு: கதறி அழுத தந்தை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
341Shares

இத்தாலியின் பிரபலமான இரண்டு இசைக்கலைஞர்களின் 4 வயது மகன் தாயாருடன் மாயமான நிலையில், தற்போது சிசிலியன் பிரதான சாலையின் ஓரத்தில் சிதைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிறுவனின் தாயாரின் சிதைந்த உடல் கண்டுபிடிக்கப்பட்ட 11 நாட்களுக்குப் பிறகு இச்சம்பவம் நடந்துள்ளது.

ஒரு சிறிய சாலை விபத்தைத் தொடர்ந்து தாயாரும் மகனும் மாயமான பின்னர், விவியானா பாரிசி மற்றும் அவரது நான்கு வயது மகன் கியோலே ஆகியோர் எவ்வாறு இறந்தார்கள் என்பதைக் கண்டுபிடிக்க பொலிசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, சிறுவன் கியோலே காட்டு விலங்குகளால் தாக்கப்பட்டு இறந்திருக்கலாம் அல்லது துஸ்பிரயோக தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சட்டத்தரணிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

தாயாரும் மகனும் கடைசியாகக் காணப்பட்ட ஐந்து நாட்களுக்குப் பிறகு பாரிசியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து 400 மீ தொலைவில் தற்போது சிறுவன் கியோலேவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்டு 3 ஆம் திகதி விவியானா பாரிசி மற்றும் அவரது நான்கு வயது மகன் கியோலே ஆகியோர் ஷொப்பிங் முடித்து குடியிருப்புக்கு திரும்பும் வழியில் சிறிய சாலை விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தாயாரும் மகனும், சம்பவ இடத்தில் இருந்து நடந்து சென்றதாக பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் ஐந்தாவது நாள் பாரிசியின் உடல் சிதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. காட்டு விலங்குகள் தாக்கியிருக்கலாம் என அஞ்சப்பட்டது.

தற்போது சிறுவன் கியோலேவின் உடலும், சிதைக்கப்பட்ட நிலையிலேயே கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சிறுவனின் சிதைந்த உடலை ஒரு பெட்டிக்குள் அள்ளியெடுத்த சம்பவத்தை நேரில் பார்த்த தந்தை டேனியல் மொண்டெல்லோ தாங்க முடியாமல் கதறி அழுதுள்ளார்.

மகனை கொன்றுவிட்டு பாரிசி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற வாதத்தை டேனியல் கடுமையாக எதிர்த்துள்ளார்.

காட்டு விலங்குகள் இருவரையும் கூட்டமாக தாக்கியிருக்கலாம் என்றே டேனியல் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் முழுமையான விசாரணைக்கு பிறகே இந்த விவகாரத்தில் உண்மை வெளிவரும் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்