சீன உயிரியல் பூங்காவில் பயங்கரம்: பார்வையாளர்கள் முன் காப்பாளரை உயிருடன் தின்ற கரடிகள்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
1212Shares

சீன உயிரியல் பூங்கா ஒன்றில் பார்வையாளர்கள் கண்களுக்கு முன்பாகவே, பூங்கா காப்பாளர் ஒருவரை கரடிகள் கடித்துக் குதறி தின்ற பயங்கரம் நிகழ்ந்தது.

சீனாவின் ஷாங்காய் உயிரியல் பூங்காவில் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அந்த பூங்கா, விலங்குகள் சுதந்திரமாக நடமாடுவதை பார்வையாளர்கள் பாதுகாப்பான வாகனங்களில் இருந்தவண்ணம் பார்க்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் ஒரு கூட்டம் கரடிகள் கூடி சாப்பிடுவதை மட்டும் காணமுடிகிறது.

ஆனால், சீன சமூக ஊடகங்களில் ஒரு மனிதரை கரடிகள் குதறுவதையும், வாகனம் ஒன்றில் பயணிக்கும் பார்வையாளர்கள் அதைக் கண்டு பதறுவதையும் காட்டும் வீடியோ வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கோர சம்பவத்தைத் தொடர்ந்து பூங்காவின் குறிப்பிட்ட பகுதிகள் மட்டும் மூடப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பாக விசாரிக்க விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்