பிரான்ஸ் ஜனாதிபதிக்கு மனநல சிகிச்சை தேவை! துருக்கி ஜனாதிபதி கடும் தாக்கு

Report Print Basu in ஏனைய நாடுகள்
242Shares

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கு மனநல சிகிச்சை தேவை என துருக்கி ஜனாதிபதி எர்டோகன் கடுமையாக சாடியுள்ளார்.

இஸ்லாத்தின் மீதான விரோதப் போக்கு காரணமாக மக்ரோனுக்கு மனநல சிகிச்சை தேவை என்று எர்டோகன் கூறினார்.

இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுடன் மக்ரோனின் பிரச்சினை என்ன? அவருக்கு மனநல சிகிச்சை தேவை என்று மத்திய கெய்சேரி மாகாணத்தில் ஆளும் நீதி மற்றும் மேம்பாட்டுக் கட்சி மாநாட்டில் எர்டோகன் கூறினார்.

தனது நாட்டில் உள்ள மில்லியன் கணக்கான மத சிறுபான்மையினரை இவ்வாறு வழி நடத்தும் தலைவரிடம் வேறு என்ன சொல்ல முடியும்? என எர்டோகன் கூறினார்.

இஸ்லாம் பிரச்சினைக்குரிய மதம் என்று மக்ரோன் அழைத்ததைத் தொடர்ந்து பிரான்ஸ் சமீபத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக பிரச்சாரம் தொடங்கியுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் பல அரசு சாரா அமைப்புகளும் மசூதிகளும் மூடப்பட்டுள்ளன, அதே நேரத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் உச்சத்தை எட்டியுள்ளன.

அண்மையில் ஜேர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள மசூதியில் பொலிஸ் சோதனை நடத்தியது. ஜேர்மன் பொலிஸ் இந்த நடத்தையை ‘பாசிசம்’ என்று எர்டோகன் குற்றம் சாட்டினார்.

சொந்த குடிமக்கள் மீது இத்தகைய தாக்குதல்களால் ஐரோப்பிய பாசிசம் ஒரு புதிய நிலையை எட்டியுள்ளது என்று அவர் கூறினார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்