என்னுடைய முழு ஆதரவும் பாஜகவிற்கு.... தந்தை, சகோதரிக்கு எதிராக இறங்கிய இந்திய வீரர்!

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா தன்னுடைய முழு ஆதரவும் பாஜகவிற்கு என அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கடந்த 2016ம் ஆண்டு, ரிவா சோலங்கி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நித்யானா என்ற பெண் குழந்தை உள்ளது.

இவருடைய மனைவி ரிவா கடந்த மாதம் கடந்த மாதம் 3-ம் திகதியன்று பாஜக கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இந்த நிகழ்வு நடந்த ஒரு மாதத்திலே ஜடேஜாவின் சகோதரி மூத்த சகோதரி நைனா மற்றும் தந்தை அனிருத்சிங் ஆகியோர், நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

அடுத்தடுத்து நடந்த இந்த நிகழ்வுகளால் ஜடேஜாவின் குடும்பத்தில் பெரும் குழப்பம் நிலவி வருவதாக பொதுமக்கள் அனைவரும் கருதி இருந்தனர்.

இந்த நிலையில் ஜடேஜா ட்விட்டர் பக்கத்தில், தன்னுடைய ஆதரவு பாஜக கட்சிக்கு என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers