டோனி ஓய்வு வதந்தி... மிகப்பெரிய பாடம் கற்றுக்கொண்டேன்: மௌனம் உடைத்து கலங்கிய கோஹ்லி

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

ட்விட்டரில் தான் பதிவிட்ட புகைப்படத்தால் டோனி ஓய்வு குறித்து பரவிய வதந்தி தொடர்பில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி மௌனம் கலைத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்தியா விளையாட உள்ள நிலையில் இந்திய அணித்தலைவர் கோஹ்லி செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்டார்.

அப்போது, டோனி ஓய்வு குறித்து பரவிய வதந்தி குறித்து பேசிய கோஹ்லி, என் மனதில் எதுவும் இல்லை, நான் என் வீட்டில் உட்கார்ந்திருந்தேன், நான் படத்தை பதிவேற்றினேன், ஆது செய்தியாக மாறியது.

அந்த போட்டி மிகவும் சிறப்பு வாய்ந்தது, நான் அதைப் பற்றி வெளிப்படையாகப் பேசவில்லை, அதனால்தான் நான் படத்தைப் பதிவேற்றினேன்.

ஆனால், நான் என்ன நினைத்து பதிவிட்டேனோ, மக்கள் அதை அவ்வாறான பார்வையில் அதை பார்க்கவில்லை, மக்கள் அதை வேறு கோணத்தில் எடுத்துக்கொண்டார்கள். இதன் மூலம் சமூக வலைதள உலகில் நான் மிகப்பெரிய பாடத்தை கற்றுக்கொண்டேன்.

அனுபவம் எப்போதுமே நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முக்கியமானது. பல வீரர்கள் கடந்த காலங்களில் வயது என்பது ஒரு எண் என்பதை நிரூபித்துள்ளனர், டோனி கூட தனது வாழ்க்கையில் நிறைய சாதித்து இருக்கிறார்.

அவரைப் பற்றி ஒரு பெரிய விஷயம் என்னவென்றால், எப்போதும் இந்திய கிரிக்கெட்டை குறித்தே யோசித்துக் கொண்டிருப்பார். கிரிக்கெட் விளையாடுவதை எப்போது நிறுத்த வேண்டும் என்பது முற்றிலும் தனிப்பட்ட முடிவு. இந்த விவகாரம் தொடர்பாக யாரும் கருத்துக்களை தெரிவிக்கக் கூடாது என கோஹ்லி கூறினார்.

மேலும், இந்திய அணி குறித்து பேசிய கோஹ்லி, கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்நாட்டு தொடர் மற்றும் ஐபிஎல், டி-20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்க நாங்கள் விரும்பினோம்.

இதன் மூலம் சிறந்த சமநிலையைான அணியை உருவாக்கியுள்ளோம். மற்ற அணிகள் ஒன்பதாம் விக்கெட் வரை துடுப்பாடும் போது, ஏன் நம்மால் முடியாது? என்ன முடிவுகள் எடுக்கப்பட்டாலும், அவை எதிர்காலத்தை குறித்தே எடுக்கப்படுகின்றன என கோஹ்லி கூறினார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்