உடல் இயக்கமற்றவர்களுக்கு உதவும் அதி நவீன சாதனம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
உடல் இயக்கமற்றவர்களுக்கு உதவும் அதி நவீன சாதனம்

நரம்புகளில் ஏற்படும் கோளாறுகளின் விளைவாக உடல் அங்கங்கள் இயக்கமின்றி செயலிழந்து போகும் தருணங்கள் (Paralysed ) ஏற்படுவதுண்டு.

இவ்வாறான தாக்கத்திலிருந்து விடுபடுவதற்குரிய மருத்துவ சிகிச்சைகள் அரிதாகவே காணப்படுவதுடன் அவை 100 சதவீதம் வெற்றியளிப்பதும் சந்தேகமே.

இந்நிலையில் தற்போது நவீன தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட NeuroLife எனும் சாதனத்தினைப் பயன்படுத்தி 24 வயதான இளைஞனின் செயலிழந்து போயிருந்து கைகளை இயக்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இச் சாதனத்தின் துணையுடன் பொருட்களை பிடித்து எடுத்தல், கிரடிட் கார்ட்டினை முறையாக பயன்படுத்துதல், கிட்டார் வாசித்தல், திரவங்களை கையாளுதல் என பல்வேறு செயற்பாடுகளையும் குறித்த இளைஞனால் மேற்கொள்ள முடிகின்றது.

இதனை ஓஹியோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments