ஜிமெயிலிலும் AMP தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்கின்றது கூகுள்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

Accelerated Mobile Pages (AMP) எனப்படுவது மொபைல் சாதனங்களில் இணையப்பக்கங்களை மிக விரைவாக செயற்படுத்தும் தொழில்நுட்பம் ஆகும்.

இத்தொழில்நுட்பமானது ஏற்கனவே தனது தேடல் பொறியில் கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இதன் ஊடாக இணையத்தளங்களை தேடிய பின்னர் அவற்றினை விரைவாக பார்வையிட முடியும்.

தற்போது இத்தொழில்நுட்பத்தினை கூகுள் நிறுவனம் ஜிமெயிலிலும் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனவே ஜிமெயிலில் இணைக்கப்பட்டுள்ள கோப்புக்களையும் வேகமான முறையில் பார்வையிடுதவற்கு இவ்வசதி உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...