முதலாவது 5G வீடியோ அழைப்பு இந்தியவில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

இந்தியாவில் தற்போது இந்திய மொபைல் காங்கிரஸ் 2019 நிகழ்வு இடம்பெற்றுவருகின்றமை தெரிந்ததே.

இந்நிகழ்வில் புதிய தொழில்நுட்பங்கள் பலவும் அறிமுகம் செய்யப்பட்டுவருகின்றன.

இந்த வரிசையில் Ericsson மற்றும் Qualcomm நிறுவனங்கள் இணைந்து முதலாவது 5G லைவ் வீடியோ அழைப்பினை ஏற்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு 5G வீடியோ அழைப்பு வசதி ஏற்படுத்தப்படுவது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும்.

குறித்த வீடியோ அழைப்பிற்காக 28GHz அலைக்கற்றை பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை MillimeterWave எனப்படும் குறித்த 5G அலைக்கற்றையானது தற்போது வட அமெரிக்கா, ஜப்பான் மற்றும் கொரியா போன்ற நாடுகளில் வர்த்தக ரீதியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இவை 28GHz மற்றும் 39GHz அதிர்வெண்களைக் கொண்டவையாகும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்